இரு நண்பர்களுக்கு இடையில் தகராறு ; மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

by sakana1

இரு நண்பர்களுக்கு இடையில் தகராறு ; மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை அநுராதபுரம், விஜேபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்டவர் தனது நண்பர்களுடன் இணைந்து தனது வீட்டில் நேற்று திங்கட்கிழமை (11) இரவு களியாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்போது, கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்