அரசாங்கத்தினால் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு !

by sakana1

அரசாங்கத்தினால் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு ! on Tuesday, November 12, 2024

அரசாங்கத்தினால் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் அமைப்புக்கள் மற்றும் பல்வேறு பதவிகளை வகித்த அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்