சீனாவின் ஜுஹாய் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடைந்தது.
ஃபேன் என்ற பெயரைக் கொண்ட 62 வயதான ஆண் ஓட்டுநர் SUV வாகனத்தை தடையின் வழியாக ஜுஹாய் ஸ்போர்ட்ஸ் சென்டருக்குள் ஓட்டிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
காயமடைந்தவர்களில் பல முதியவர்கள், பதின்வயதினர் மற்றும் குழந்தைகள் உள்ளடங்குவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். மேலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதன் விளைவாக தற்போது கோமா நிலையில் உள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரு பெரிய சிவில் மற்றும் இராணுவ விமான கண்காட்சியை நடத்தும் நகரில் பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.