தென்கொரியா மீது ஜிபிஎஸ் தொடர்புகளைத் துண்டிக்கும் தாக்குதல்களை வடகொரியா நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் தொடர்புகளைத் துண்டிக்கும் தாக்குதல்களால் தென்கொரியாவில் பல கப்பல்கள் மற்றும் விமானங்களின் செயற்பாடுகள் பாதிப்படைந்ததாக தென்கொரிய இராணுவம் இன்று சனிக்கிழமை தெரிவித்தது.
வட கொரியாவின் ஜிபிஎஸ் சிக்னல் நெரிசல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் (ஜேசிஎஸ்) மேற்குக் கடல் பகுதியில் இயங்கும் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிபிஎஸ் ஜாமிங் ஆத்திரமூட்டலை நிறுத்துமாறு வட கொரியாவை ஜேசிஎஸ் வலியுறுத்தியுள்ளது.
வட கொரியாவின் ஜிபிஎஸ் ஆத்திரமூட்டல்களை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம். மேலும் இதனால் ஏற்படும் ஏதேனும் சிக்கல்களுக்கு வடகொரியா பொறுப்பேற்கப்படும் என்று எச்சரிக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.