இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது!

by smngrx01

றாகம பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

றாகம, மட்டுமாகல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முறைப்பாட்டாளரின் பிள்ளையை, 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கு இலஞ்சமாக இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட அதிபர் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பணத்தை நேற்று பிற்பகல் பாடசாலையின் காரியாலயத்தில் வைத்து பெறப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்