ஆன்லைன் விளம்பரம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு மாடல்

காணொளிக் குறிப்பு, அய்டானா ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல், இணைய உலகில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது

ஆன்லைன் விளம்பரம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு மாடல்

அய்டானா ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல். ஒரு வருடத்திற்கு முன் உருவாக்கப்பட்ட இவருக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

இவர், பார்சிலோனாவில் உள்ள ‘க்ளுலெஸ் ஏஜென்சி’ எனும் நிறுவனத்திற்காக ஒவ்வொரு மாதமும் சமூக ஊடகங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

“ஒரு ‘இன்ஃப்ளுயன்சர்’ என்ன செய்வாரோ, அதைத் தான் உருவாக்க விரும்புகிறோம். என்னை ஒரு புகைப்படம் எடுத்து, அதை ஏ.ஐ தொழில்நுட்பத்தில் மாற்றிவிடுவோம். உண்மைக்கு நெருக்கமாக அதைக் காட்ட, சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்” என்கிறார் க்ளுலெஸ் ஏஜென்சியின் சோபியா நோவலஸ்.

ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உடற்பயிற்சியை விரும்பும் ஒரு பெண்ணாக அய்டானா காட்டப்படுகிறார். ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பிராண்டுகள் கூட இவருக்கு ஸ்பான்சர் செய்கின்றன.

ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் மற்றும் அய்டானா செய்யும் விளம்பரங்கள் மூலம் இந்திய மதிப்பில் ஒரு மாதத்திற்கு பல லட்ச ரூபாய் வருமானம் பெறலாம் என்கிறது க்ளுலெஸ் ஏஜென்சி நிர்வாகம்.

அய்டானாவின் ஆன்லைன் வாழ்க்கை அவருடைய பெரும்பான்மையான ஆண் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. அவர்களே ஏ.ஐ மாடல்களுக்கான முக்கிய சந்தை.

ஆனால் இன்ஃப்ளுயன்சர் டனே மெர்சர் இதிலுள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறார். “ஏ.ஐ மாடல்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் அதிகரிப்பதால் பெரும் சிக்கல்கள் உருவாவதைக் காண முடிகிறது. உண்மைக்கு நெருக்கமான, ஆனால் சாத்தியமில்லாத ஒரு அழகு தரத்தை அவர்கள் நிறுவுகிறார்கள். அவர்களைப் பின்தொடரும் பலர் அது உண்மையான நபர் என நினைக்கிறார்கள்.” என்று கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு