கிணற்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு !

by admin

கிணற்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு ! on Friday, November 08, 2024

ஹொறனை, வெளிக்கல, ரன்பொக்குன வத்த வீதி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய இரோஷா மல்காந்தி என்ற இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இப்பெணின் சடலமே அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பொது கிணற்றிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண், நீண்டகாலமாக மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், உடம்பில் அடிக்கடி ஏற்படும் அதிக உஷ்ணத் தன்மையின் காரணமாக நாளொன்றுக்கு பல தடவைகள் குளித்து வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், அங்கொடை வைத்தியசாலையிலும் பின்னர் ஹல்தொட்ட வைத்தியசாலையிலும் இப் பெண் சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறும், ஹொரனை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்