1
ராகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, மட்டுமாகல பகுதியல் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (07) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025 ஆம் கல்வியாண்டுக்காக தரம் 01 இல் சேர்ப்பதற்கு குறித்த பெண் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்த நிலையில், பாடசாலை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை 04.00 மணியளவில் இலஞ்சம் பெற்ற வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான நபரை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.