வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புல்கால பகுதியில் நேற்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீடொன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், பெண்ணொருவரும் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 43, 65 வயதுகளையுடைய மாரவில மற்றும் வென்னப்புவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வீடொன்றில் அமைக்கப்பட்ட நீர் வடிகால் அமைப்பு பராமரிப்புப் பணிகளுக்காக வந்த இருவர், பழுதுபார்க்கும் பணியை முடித்து வீட்டை விட்டு வெளியேறும் போது முகத்தை மூடிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பராமரிப்பு பணிக்கு வந்த ஒருவரும், வீட்டிலிருந்த பெண்ணொருவருமே காயமடைந்துள்ளனர்.
எவ்வாறெனினும், சந்தேக நபர்கள் அயைாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.