5
ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு ! on Friday, November 08, 2024
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.13 ரூபாவாகவும், 297.18 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.40 ரூபாவாகவும், 297.48 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்த அதேவேளை, ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.