ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்!

by adminDev

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான ,அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை   நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல,நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை,நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள்.நாம் கைவிடாத வரை,நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும்.

நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன்.இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக ,நாங்கள் சமூகங்களை உருவாக்குவது ,கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம்.

அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட ,அமெரிக்காவின் எதிர்காலத்தி;ற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய,வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும்,ஒன்றிணைக்க  முயன்றோம்.எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம்.

தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சிபாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும்,ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன்.அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம்.

தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை.

அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது.மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும்.

அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை,மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள்.

நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும்,இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம்,அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம்,எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.

துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும் பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம்.

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும்,நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும்,சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும்,உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும் , நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம்.

மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று,ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம்,அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல ,எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம்.

எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. , ,ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு,கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு,எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம்,

இளம் வயதினருக்கு – கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள்,ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் ஒரு விடயம் உள்ளது , சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்.இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல.

மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே.ஒருபோதும் கைவிடாதீர்கள்.உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்.உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது.

உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது.

ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம்.

இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை,இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம்,சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக,ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம்.

உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன்,எனது வாழ்;க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன்.

பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன்.

ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான,மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும்,உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன்.

எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும்,அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும்.

நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் – ஒரு பழமொழி உள்ளது,வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார்,காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை.

அந்த பழமொழி இதுதான் – இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும்

பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும்.ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம்.

ஆனால் இன்னுமொரு விடயம் – அமெரிக்கா – நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம்.வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம்,உண்மையின் சேவையின் வெளிச்சம்,அது பின்னடைவுகளி;ன் போதும்,அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும்.

தொடர்புடைய செய்திகள்