ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதான மற்றும் அபிவிருத்தி ஆலோசகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதான மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் பெட்ரிக் எம்.சி.கார்த்தி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.
ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்தோடு, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
விசேடமாக மாகாண மட்டத்தில் சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் நோக்கிலான முன்னேற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது