அமெரிக்க உளவுத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய அமெரிக்க பிரஜை கைது

by wp_fhdn

அமெரிக்க இராணுவம் பற்றிய உளவுத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க பிரஜை ஒருவரை ஜெர்மனி கைது செய்துள்ளதாக ஜேர்மனியின் பெடரல் நீதிமன்ற அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் ஜேர்மனியின் Frankfurt இல் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன் தனியுரிமைச் சட்டத்தின் கீழ் மார்ட்டின் டி என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட நபர், நேற்று (07) பிராங்பேர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு தொடர்பான ஒரு அறிக்கையில், அவர் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனத்தின் முகவராகப் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவர் “2024 இல் சீன அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அமெரிக்க இராணுவத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை அவர்களுக்கு வழங்க முன்வந்ததாகவும்” தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சமீப காலம் வரை அமெரிக்கப் படைகளுக்காக வேலை செய்து வந்தார் என்பதையும் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஜேர்மன் உளவுத்துறையுடன் “நெருக்கமான ஒருங்கிணைப்பில்” விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வழக்கறிஞர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும், இந்த கைது தொடர்பான செய்திக்கு சீனாவும் அமெரிக்காவும் இதுவரை பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்