பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனின் (Shakib Al Hasan) வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை புதன்கிழமை (06) பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஒக்டோபர் 2 ஆம் திகதி ஷாகிப், அவரது மனைவி உம்மே அகமட் ஷிஷிர் மற்றும் ஐந்து நபர்களின் கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு BFIU அறிவுறுத்தியது.
நிதி முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடை நிறுத்தப்பட்ட கணக்கின் உரிமையாளர்கள் அடுத்த 30 நாட்களுக்கு எந்தவிதமான நிதி பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.
தேவைப்பட்டால் இந்த இடைநீக்க காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷகிப் தற்போது அவரது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார்.
அவர் அண்மையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.