போலி இலட்சினைகளை மோட்டார் வாகனத்தில் பயன்படுத்திய பெண்ணுக்கு பிணை !

by admin

போலி இலட்சினைகளை மோட்டார் வாகனத்தில் பயன்படுத்திய பெண்ணுக்கு பிணை ! on Thursday, November 07, 2024

உத்தியோகபூர்வ இலட்சினைகளை மோட்டார் வாகனத்தில் போலியாகப் பயன்படுத்திய பெண் ஒருவருக்கு, கண்டி நீதிமன்றத்தால் 5 இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு, மற்றும் அரச இலட்சினை முதலானவற்றை தனது வாகனத்தில் காட்சிப்படுத்திய பெண் ஒருவரை கண்டிப் பொலிஸார் கைதுசெய்து கண்டி நீதவான் முன் ஆஜர் செய்தனர்.

முறைப்பாட்டை விசாரித்த கண்டி மேலதிக நீதவான் 5 இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட இரண்டு சரீரப்பிணைகளை வழங்கி சந்தேக நபரை விடுதலை செய்தார்.

மேற்படி முறைப்பாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டவர் கண்டி, அனிவத்தை பகுதியில் வசிக்கும் பிரபல வர்த்தகராவார்.

மேற்படி சந்தேக நபர் நீதிமன்றால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்