பாகிஸ்தானில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!

by smngrx01

பாகிஸ்தானின் தேசிய மின் சக்தி ஒழுங்குமுறை ஆணையகத்துக்கு (NEPRA) நாடு முழுவதும் மின் கட்டணத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவையான ARY News தெரிவித்துள்ளது.

இந்த உயர்வு ஏற்கனவே அதிக பயன்பாட்டுச் செலவுகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் மீது 8.73 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மேலதிக சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவு தொடர்பில் NEPRA எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி விசாரணை நடத்தும் என்று ARY News தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மின் கட்டணம் கடந்த ஆண்டிலிருந்து 10 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது, இதனால் பாகிஸ்தான் குடிமக்கள் மீது சுமை அதிகரித்துள்ளது.

இதனிடையே, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எரிபொருள் விலை பொறிமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்