செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்

by admin

ரெலோ அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார் 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் தேசியத்திற்கு எதிரான விரோதமான செயல்களை செய்யும் கொழும்பில் குற்றவியல் வழக்கு பின்னணிகளை கொண்டவர் யாழ் .  தேர்தல் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடுகின்றார். அதனை நான் கடுமையாக எதிர்க்கிறேன். 

அவர்கள் உடைய ஆவணங்களை வெளியிட நான் தயார் எனக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுக்காதல் ,அத்தனை ஆவணங்களையும் கையளிப்பேன். 

அவரை கட்சிக்குள் கொண்டு வந்து , வேட்பாளர் ஆக்கியவர் செல்வம் அடைக்கலநாதன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுக்கட்டமைப்பாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அனைவரும் வேலை செய்த போது, வன்னி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் வேலை செய்யவில்லை. 

அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பெரும் தொகை பணத்தினை பெற்று , சங்கு சின்னத்திற்கு வேலை செய்யாது இருந்தனர். 

ரெலோவில் இருந்த பலர் விலகி சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிறிகாந்தா , சிவாஜிலிங்கம் போன்றோரும் , வன்னியில் உதயராசா உள்ளிட்டோரும். இதற்கெல்லாம் காரணம் ரெலோவின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனே . எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்