அநுர சகோதரருக்கு நாங்கள் வழி காட்டுவோம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்ற முடியாமைக்கான காரணம், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது அவர்களுக்குத் தெரியாததனால் ஆகும் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு கந்துசுரிந்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்காக சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு பொதுக்கூட்டம் நேற்று (06) பிற்பகல் நீர்கொழும்பு 50 ஏக்கர் கந்துசுரிந்துகம பிரதேசத்தில் நடைபெற்றது.
“நாங்கள் வாக்குறுதி அரசியல் செய்யவில்லை. கண்டிப்பாக செய்யக்கூடியதை மட்டுமே பேசும் அரசியலை நாங்கள் செய்து வருகிறோம். அந்த வழியை எமது சகோதரர் ஜனாதிபதிக்கு காட்ட விரும்புகின்றோம். அவர் வாக்குறுதி அளித்த பல விடயங்கள்… நிறைவேற்றப்படவில்லை. செய்யவும் முடியாது. மின் கட்டணம் 40% குறைக்கப்படும் என்றார்கள். செய்ய முடியாது. பெற்றோல் விலை 200 ரூபாயாக இருக்கும் என்றார்கள். இறுதியாக, பணக்காரர்கள் அடிக்கும் 95 ஐ மட்டுமே குறைத்தார். உங்களுக்கு ஒன்றுமில்லை.”
” தேங்காய் எப்படி 140 ரூபாய் ஆனது என்பதை விளக்க எம்மால் முடியும். முட்டை விலை அதிகரித்த முறை. எளிய முறையில். ஒரு பொருளின் விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது. இவை தெரியாது. நீங்கள் சந்தைக்குச் செல்லவில்லை என்றால் உங்களுக்கு எப்படித் தெரியும்.”9
அன்றிலிருந்து நாங்கள் தேசியம் மற்றும் தொழில்முனைவு பற்றி பேசுகிறோம். இன்று அமெரிக்காவில், டிரம்ப் தேசியம் மற்றும் தொழில்முனைவு பற்றி பேசுகிறார். டிரம்பின் முடிவுகளில் இருந்து இலங்கை மக்கள் ஏதாவது கற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்