அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பில் உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் தகல்கள் தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.