பெண்ணை கொ லை செய்து பணம் ,நகை கொள்ளை !

by smngrx01

பெண்ணை கொ லை செய்து பணம் ,நகை கொள்ளை ! on Thursday, November 07, 2024

பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு அவரின் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று கண்டி உடுதெனியவில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று(06) இடம்பெற்றுள்ளது.

சித்தி ஆபிதா என்ற 70 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கொலை செய்யப்பட்ட பெண், இரவில் நித்திரையிலிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், அப் பெண்ணை கட்டிவைத்து மூச்சுத்திணறவைத்து கொலை செய்ததன் பின்னர், வீட்டிலுள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரியருகிறது.

இலட்சக்கணக்கில் பெறுமதிமிக்க தங்க நகைகளும் பணமும் இச்சம்பவத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தின்போது, உயிரிழந்த பெண்ணின் கணவர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவரெனவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்