15
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் குழந்தை பிறந்த சில மணித்தியாலத்தில் இணையம் மூலம் விற்பனை செய்ய முயற்சித்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 21 வயதான ஜுனிபெர் ப்ரைசன் என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தை தத்தெடுத்துக் கொள்ளுமாறு முகப்புத்தில் பதிவிட்ட அவர், தத்தெடுக்க வருவோரிடம் 200 டொலர் பணம் கேட்டு வாதிட்டுள்ளார்.
இதனை அறிந்த அயல் வீட்டார், குழந்தைகள் பாதுகாப்புத்துறையிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய அந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை டெக்சாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.