1
அனுர வந்தாலும் ஒன்றுமில்லை
வவுனியா வடக்கு #வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் 2024 நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை விசாரணைக்காக வவுனியா அலுவலகத்திற்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் (CTID) தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.