மக்களை வறுமையில் இருந்து மீட்டு பொருளாதார ரீதியில் வலுவூட்டுவது இலக்காகும்.

by adminDev2

நாட்டு மக்களின் வறுமையை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் ஒழித்து அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்களின் அனுபவம் இந்த வேலைத்திட்டத்திற்கு முக்கியமானதாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டாhர்.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஜனாதிபதி இது பற்றி கருத்து வெளியிட்டார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் பிரதான பணியாகும்.

ஊழல் மோசடிகளினால் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பூர்த்தி செய்யவும் முடியாமல் போயிருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் அரசியல் ரீதியான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. அரச அதிகாரிகளுக்கு சுதந்திரமாக தமது பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்