3
டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் வைத்தியசாலைகளில் சுவாச நோய் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் கழிவுகளை எரித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே டெல்லியின் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
காற்றில் உள்ள நுண்துகள்களில் μm 2.5 (மைக்ரோ மீற்றர்) என்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் காற்றின் தர குறியீட்டில் 10 சதவீதம் மட்டுமே வேளாண் கழிவுகளை எரித்தல் மூலம் மாசுபட்டதாக டெல்லியின் காற்றின் தர மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.