டிரம்ப் வெற்றி பெற்றார்: அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் குற்றவாளி இவரே!!

by adminDev2

2024 அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 279 தேர்தல் கல்லூரிகளில் பெற்று வெற்றி பெற்றார். கமலா ஹரீஸ் 223தேர்தல் கல்லூரிகளில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக உயர்ந்த பதவியான அமெரிக்க அதிபர் பதவியை வென்ற முதல் குற்றவாளியும் இவர்தான். எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால் டிரம்ப் பதவியேற்றவுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ள நிலையில், ஹாரிஸ் அல்லது தற்போதைய ஜனாதிபதி ஜோ பிடன் டிரம்பின் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

புளோரிடாவில் உள்ள பாம் பீச் கவுண்டி கன்வென்ஷன் சென்டரில் திரண்ட ஆதரவாளர்களிடம் புதன்கிழமை அதிகாலை டிரம்ப், “முன்னோடியில்லாத மற்றும் சக்திவாய்ந்த ஆணையை அமெரிக்கா எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறினார்.

குடியரசுக் கட்சியினர் ஓஹியோ மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள இடங்களை வென்று அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது. 47-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி.

இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது. என் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளை தீர்ப்பேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன் என அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்