சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது கல் வீசி தாக்குதல்!

by adminDev

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டிலிருந்து இன்று (05-11-2024) மாலை பிரச்சார பணிகளுக்காக காரில் பயணித்த போது கார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது, காரில் சசிகலா ரவிராஜ் இருந்ததாகவும், எனினும் அவர் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, சமீபத்தில் சசிகலா ரவிராஜ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் கல் வீசி உடைக்கப்பட்ட நிலையில், நேற்று (05) அவர் பயணித்த கார் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்