முன்பிள்ளைக்‌ கல்வியின்‌ அடித்தளத்தில்‌ சமூக வகுப்பின்‌ செல்வாக்கு .

by wamdiness

முன்பிள்ளைக்‌ கல்வியின்‌ அடித்தளத்தில்‌ சமூக வகுப்பின்‌ செல்வாக்கு . on Wednesday, November 06, 2024

முன்பிள்ளைக்‌ கல்வியின்‌ அடித்தளத்தில்‌ சமூக வகுப்பின்‌ செல்வாக்கு

“உலகினை மாற்றும்‌ உன்னதமிக்க ” ஆயுதம்‌ கல்வி” என்ற நெல்சன்‌ மண்டலோபின் கூற்றுக்‌கிணங்க கல்வி என்பது ஒருவருடைய வாழ்வின்‌ மகத்‌தானதும் உன்னதமானதும் ஒரு தேவையாக கருதப்படுகின்‌றது . இதன்‌ அடிப்படையில்‌ கல்விக்கான அடித்தளத்தையும்‌ ஆரம்பத்தையும்‌ அடையாளப்படுத்தும்‌ இடமாக முன்பள்ளிகள்‌ என்பது காணப்படுகின்றது. ஆரம்பக்‌ காலம்‌ முதல்‌ இன்று வரை குழந்தைகளின்‌ உடல்‌, உள, சமூகவியல்‌ ரீதியான வளர்ச்சிப்‌ பரிணாமங்களில்‌ முன்பள்ளிகள்‌ முக்கிய பங்காற்றுவதுடன்‌ தேசிய, சர்வதேச ரீதியிலும்‌ இதன்‌ தேவை இன்றியமையாததாகவும்‌ காணப்படுகின்றது.இதன்‌ அடிப்படையில்‌ இரண்டரை வயதில்‌ இருந்து ஐந்து வயது வரையுள்ள காலப்பகுதியை குறிப்பதாக முன்பள்ளிக்‌ கல்வியானது வரைவிலக்கணம்‌ செய்யப்படுகின்றது. இப்பருவ வயதுப்‌ பிரிவினரை இலக்காகக்‌ கொண்டு பல்வேறு பெயர்களில்‌ முன்‌பிள்ளைப்பருவ பராமரிப்பும்‌ விருத்தியும்‌ தொடர்பான பல்வேறு நிலையங்கள்‌ செயற்பட்டு வருகின்றன.

அதன்‌ அடிப்படையில்‌ பார்த்தோமாயின்‌ முன்‌-பிள்ளைப்‌ பருவ விருத்தி நிலையங்கள்‌, முன்‌-பிள்ளைப்‌ பாடசாலைகள்‌, மொண்டிகரிகள்‌, தினசரிக்‌ காப்பு நிலையங்கள்‌, கிரேச்சார்ஸ்‌ எனப்படும்‌ பிள்ளைப்‌ பராமரிப்பு நிலையங்கள்‌ என்பன அவற்றுள்‌ சிலவாக உள்ளன . அரசாங்கத்தின்‌ நேரடி முகவர்களான உள்ளுராட்சி சபைகள்‌, தனியார்‌ தொண்டூ நிறுவனங்கள்‌, சமயத்‌ தாபனங்கள்‌ மட்டுமன்றி, இலாபத்தை நோக்காகக்‌ கொண்ட தனியார்‌ குழுக்களும்‌ இக்கல்வி மற்றும்‌ பராமரிப்பில்‌ கரிசனைக்‌ காட்டி வருகின்றது என்பதும்‌ குறிப்பிடத்தக்க விடயமாகும்‌.இன்றைய நிலையில்‌ மிகவும்‌ முக்கியத்துவம்‌ உடையதாக கருதப்படுகின்ற முன்பள்ளி கல்வியில்‌ சமூக வகுப்பின்‌ தாக்கம்‌ எவ்வாறு காணப்படுகிறது என்பதை இணங்காண்பதே இக்கட்டூரையின்‌ முக்கிய நோக்கமாக அமைகிறது . சமூக அமைப்பு என்பது ஒரு சமூகத்தில்‌ உள்ள தனியாட்கள்‌ அல்லது குழுக்களுக்கு இடையில்‌ படிமுறை அமைப்பிற்கான வேறுபாடு ஆகும்‌.

ஒரு நாட்டில்‌ காணப்படும்‌ சமூக வகுப்புகளை இணங்காண்பதற்கு பொருளாதாரம்‌, மொழி,கல்வி,தொழில்‌, அந்தஸ்த்து,பிரதேசத்தின்தன்மை,சமூகஉறவுகள்‌, சமூகவகிப்பாகம்‌,தனிப்பட்டஆற்றல்கள்‌,நடை, உடை, என்பன உதவுகின்றன என்றால்‌ அது மிகையாகாது. பர்னிஸ்டைன்‌ என்பவரின்‌ கருத்துப்படி, “ஒரு பிள்ளையின்‌ சொற்களஞ்சியம்‌, சொற்பிரயோகம்‌, வாக்கிய அமைப்பு,மொழி மற்றும்‌ எண்ணக்கரு விருத்தி போன்ற அனைத்தும்‌ சமூக வகுப்புகளுக்கு அமைய வேறுபடும்‌” என்கின்றார்‌.

சமூக வகுப்புகள்‌ முன்பிள்ளைக்‌ கல்வியின்‌ மீது பாரிய செல்வாக்கு செலுத்துகின்றமையினை இக்கட்டுரையின்‌ முடிவில்‌ நீங்கள்‌ அறிந்து கொள்வீர்கள்‌ இதன்‌ அடிப்படையிலேயே இக்கட்டுரையானது அமையும்‌. ஒருவர்‌ கல்வியினை பெற வேண்டுமாக இருந்தால்‌ சமூக ரீதியில்‌ அவர்கள்‌ முன்னேற்றம்‌ அடைந்த வகையில்‌ காணப்பட வேண்டும்‌ என்பதும்‌ உண்மையே அதிலும்‌ முன்‌பள்ளி கற்கையில்‌ சமூக வகுப்பின்‌ செல்வாக்கானது அதிக அளவில்‌ ஆதிக்கம்‌ செலுத்துகிறது என்பது பல்வேறுபட்ட எடுத்துக்காட்டுகளின்‌ மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது இதன்‌ அடிப்படையில்‌ பார்ப்போமாயின்‌ கல்வியின்‌ அடிப்படையில்‌ ஆரம்பக்‌ கல்வியே முதன்மையானதாக கருதப்பட்டாலும்‌ அந்த ஆரம்பக்‌ கல்வியினை பெறுவதற்கான அடித்‌த்தை வழங்குவது முன்பள்ளி கற்கையாகும்‌.

ஏனெனில்‌ ஒரு பிள்ளை எழுதுவதற்கோ கற்றலில்‌ ஈடுபடுவதற் முயற்சி
மேற்கொள்வதற்கோ ஏனைய மாணவர்களோடூ சமூக தொடர்புகளை பேணுவதற்கோ அடித்தளத்தை இடுவது முன்‌ பிள்ளை கற்கை நெறி ஆகும்‌. இது உரிய வயதில்‌ அனைவருக்கும்‌ கிடைக்கப்‌ பெற வேண்டும்‌ என்பது பல்வேறு பட்டவர்களின்‌ எதிர்பார்ப்பாகவே காணப்படுகிறது. தற்காலத்தில்‌ வளர்ச்சி அடைந்துள்ள முன்பள்ளி கற்கையானது உயர்‌ வகுப்பினரே அதிகளவில்‌ பெற்றுக்‌ கொள்வதற்கான வாய்ப்பானது காணப்படுகிறது ஏனெனில்‌ வசதி படைத்தவர்களிடம்‌ மாத்திரமே அதனைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கான வழிவகைகளும்‌ காணப்படுகின்றமை இங்கே மறக்க முடியாத உண்மையே.

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும்‌ கற்கை நன்றே” ஏழைகளின்‌ ஆபுதமே கல்விதான்‌ சாதாரணமாக இருந்து யோசித்துப்‌ பாருங்கள்‌ நடைமுறையில்‌ ஒரு சாதாரண குடும்பத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ ஆசிரியர்‌ தொழிலை பெற்றுக்‌ கொள்வதே கடினமான ஒரு செயலாக காணப்படுகிறது. அவ்வாறு பெற்றுக்‌ கொண்டாலும்‌ கஷ்டப்பட்ட பிரதேசங்களின்‌ அவர்களுக்கான வேலைவாய்ப்பானது கிடைக்கின்‌றமையும் உண்மையிலேயே நிகழ்ந்த வண்ணம்‌ தானே உள்ளது.

ஒரு ஆசிரியரின்‌ பிள்ளை வைத்தியர்‌ ஆவதற்கும்‌ வைத்தியரின்‌ பிள்ளை வைத்தியர்‌ ஆவதற்கும்‌ வேறுபாடுகள்‌ உள்ளது தானே இதை யாரேனும்‌ மறுக்க முடியுமா? அல்லது மறுப்புத்தான்‌ தெரிவித்து விட முடியுமா? உண்மை நிலவரம்‌ இதுதான்‌ என்பது யதார்த்தமான உண்மையே. இவ்வாறு இருக்க
முன்‌ கல்வி பற்றி சொல்லவா வேண்டும்‌ உயர்ந்த வகுப்பினர்‌ தமது பிள்ளைகளுக்கான முன்‌ கல்வி கற்கை நெறியினை சிறந்த வகையில்‌ பெற்றுக்‌ கொடுக்கின்றனர்‌. ஆனால்‌ தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்‌ இன்றளவிலும்‌ முன்‌ பள்ளிக்கு என பிள்ளைகளை அனுப்பாத நிலையும்‌ காணப்படுகிறது இது மன வருத்தத்திற்குரிய விடயமாக கருதப்படுகின்றது.

முன்‌ பள்ளி கல்வியானது கட்டாயம்‌ அல்ல என்றாலும்‌ ஆரம்பக்‌ கல்விக்கான அடித்தளத்தை இடுவது முன்‌பள்ளிகளெ தயார்‌ படுத்‌த்துவது மற்றும்‌ விளையாட்டுக்களில்‌ ஈடுபடவைப்பது போன்றவைகள்‌ நடைபெறுகின்றது ஆனால்‌ இன்றைய நிலையில் கற்பிக்கின்ற போக்கானது காணப்படுகிறது ஆங்கிலம்‌,சிங்களம்‌ போன்ற பாடநெறிகளுக்கான பயிற்சிகளும்‌ அளிக்கப்படுகின்ற நிலைமையும்‌ காணப்படூகின்‌ற காலமாற்றத்திற்திற்‌ இது அவசியமானதாக காணப்பட்டாலும்‌ உண்மையில்‌ இது விமர்சனத்திற்கு உரியதாக காணப்படுகின்றது ஆயினும்‌ முன்‌ பிள்ளை கற்றலில்‌ சமூக வகுப்பு என்பது ஆதிக்கம்‌ செலுத்துகிறது இது யாமறிந்த உண்மை.

இன்று எமது சமுதாயத்தில்‌ முன்பள்ளி கல்வியானது முதன்மைப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது எனவே இதனை உணர்ந்து ம்‌ தமது பிள்‌ முன்‌ பிள்ளை பருவ கற்றலில்‌ ஈடுபடுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்‌ கொடுக்க வேண்டும்‌ அது மாத்திரமன்றி மாணவர்களின்‌ வயதுக்கு ஏற்ற வகையில்‌ விளையாட்டுக்களின்‌ மூலம்‌ பயிற்சிகள்‌ உரிய முறையில்‌ அளிக்கப்பட வேண்டும்‌ இது அவர்களது ஆரம்பக்‌ கல்விக்கு அடித்தளத்தை வழங்கும்‌. பாடசாலைகளின்‌ ஆரம்பப்‌ பிரிவுக்கு முன்னதாக கட்டாயப்படுத்தப்பட்ட முன்‌ பிள்ளை கல்வியானது இலவசமாக வழங்கப்படுமாக இருந்தால்‌ அது அனைவருக்கும்‌ பாரிய நன்மையை ஏற்படுத்தும்‌ அத்தோடு நன்மையானதாகவும்‌ அமையும்‌ ஏனெனில்‌ அந்தளவுக்கு முக்கியத்துவம்‌ உடையது முன்‌ பிள்ளை கல்வியென உணர வேண்டும்‌ அதன்‌ அடிப்படையிலேயே இதனை இங்கே குறிப்பிடலாம்‌ .

கல்வியின்‌ நோக்கம்‌ யாதெனில்‌ “வாழ்வியல்‌ ஆளுமையுள்ள மானிட சமுதாயத்தை தோற்றுவிப்பது”? ஆகும்‌. இதன்‌ அடிப்படையிலேயே கல்வியானது வழங்கப்பட வேண்டும்‌ இதன்‌ அடிப்படையில்‌ கல்விக்கான அடித்‌ வழங்கும்‌ முன்‌ பள்ளி கற்கை நெறியானது சமூக வகுப்பின்‌ அடிப்படையில்‌ வழங்கப்படுவதை குறைத்து அனைவரும்‌ கல்வியை பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என்பதே எம்மவர்களின்‌ அவாவாக காணப்படுகிறது இதன்‌ அடிப்படையில்‌ சிறந்த முறையில்‌ முன்கல்வி வழங்கப்படூமிடத்து சிறப்பான கல்வியைப்‌ பெற்றுக்‌ கொள்வதோடு வாழ்வியலை திறன்பட அமைத்துக்‌ கொள்ளலாம்‌.

ஞானசெல்வம்‌ நிரோஜினி,

கல்வியியல்‌ சிறப்பு கற்கை மாணவி.

கல்வி,பிள்ளை நலத்துறை,

கிழக்குப்‌ பல்கலைக்கழகம்‌, இலங்கை.

தொடர்புடைய செய்திகள்