பார் பெமிட்:காசு சேரக்கும் அங்கயன்!

by 9vbzz1

நாடாளுமன்ற தேர்தலில் மதுபானச்சாலை அனுமதிப்பத்திர விவகாரம் நாள்தோறும் சூடுபிடித்துவரும் நிலையில் எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். 

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என எம். ஏ. சுமந்திரன் தெரிவிததிருந்தார்.

இந்நிலையிலேயே தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார் 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர் சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு ,தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் மற்றொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக காவல் நிலையத்தில் மதுபானச்சாலை அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்