தமிழரசுக் கட்சியில் பெண்களை பயன்படுத்தி ஆண்கள் தமக்கான வாக்கினை பெற்றுக் கொள்ள முற்படுவதாக முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரமுகரான மிதிலைச்செல்வி பத்மநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழரசு கட்சி என்பது ஜனநாயகம் இல்லாத கட்சி அதற்குள் ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
தமிழரசுக்கட்சியில் மத்திய குழு எனும் பெயரால் ஒரு சிலரே தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் போது கூட அப்பகுதியால் தாண்டி செல்லும் தலைவர்கள் போராடுபவர்களை கண்டுகொள்வதில்லை..
பெண்களை வைத்து ஆண்கள் தமக்கான வாக்கினை பெற்றுக் கொள்வதே கடந்த காலங்களிலும் நடந்தது.தற்போதும் அதுவே நடப்பதால் கட்சியிலிருந்து விலகி பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் மிதிலைச்செல்வி தெரிவித்துள்ளார்.