இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , காசாவில் போர் தொடர்பாக பல மாதங்களாக பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ஜோவ் கேலண்ட்டை (Yoav Gallan) செவ்வாயன்று பதவி நீக்கம் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவர் மீது இருந்த நம்பிக்கையை இழந்ததையடுத்து அவரது பதவிக் காலத்தை இன்றுடன் முடிக்க முடிவு செய்துள்ளேன் என்று இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு தனது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹலன்டுக்குப் பதிலாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கட்ஸ் ( Katz) பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கட்ஸின் வெளியுறவு அமைச்சர் பதவியை கிதியோன் சார் ஏற்றுக்கொள்வார்.
இஸ்ரேலின் கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய கேலண்ட், இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு எனது வாழ்க்கையின் பணியாக இருந்தது மற்றும் எப்போதும் இருக்கும் என்று ஜோவ் கேலண்ட் கூறினார்.