இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

by wamdiness

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் லேசான மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு திசையிலிருந்து மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் வடமேற்கு அல்லது மாறுபட்ட திசைகளில் காற்று வீசும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவுக்கு மிதமானதாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்