செவ்வாயன்று (05) நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்ப முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் ஒன்பது மாநிலங்களை வென்றார்.
அதேநேரத்தில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் நான்கு மாநிலங்களைக் கைப்பற்றினார்.
கென்டக்கி, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, அலபாமா, புளோரிடா, ஓக்லஹோமா, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் சற்று முன் வரை ட்ரம்ப் 178 தேர்தல் வாக்குகளைப் பெற்றார்.
ஹாரிஸ் வெர்மான்ட், மேரிலாண்ட், மாசசூசெட்ஸ் மற்றும் வொஷிங்டன், டி.சி ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் சற்று முன் வரை 99 தேர்தல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ட்ரம்ப், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்ப முயன்றுள்ளார்.
அதேநேரம், ஹாரிஸ் 2021 ஜனவரி முதல் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
ஒரு வேட்பாளருக்கு தேர்தலில் வெற்றிபெற 538 தேர்தல் வாக்குகளில் குறைந்தது 270 தேவை.
அதாவது, அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது.
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.
அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது.
தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
இதன்படி 52.1 சதவீத வாக்குகளுடன் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். 46.08 சதவீத வாக்குகளுடன் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
முன்னணி நிலவரம் :
டொனால்டு டிரம்ப் -178 இடங்கள் முன்னிலை
கமலா ஹாரிஸ் – 99 இடங்கள் முன்னிலை