வைத்தியர் ஷாபி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை

by adminDev2

வைத்தியர் ஷாபி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை

விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை , பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர்  ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது,  வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று புதன்கிழமை (06) நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, பிரதிவாதியான வைத்தியர் ஷாபியை தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து, குருணாகல் நீதவான் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும், வைத்தியர் ஷாபிக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்