19
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனபல்லம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாத்திரையில் கலந்துகொள்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட பெண், லொறியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
அனபல்லம பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாரதி வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.