பதுளையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது!

by adminDev2

பதுளையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது! பதுளை, செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 576,500 மில்லிலீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன தலைமையில் பசறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெர்ல்களையும் கைப்பற்றியுள்ளதுடன்  அப்பகுதியில் மிக நீண்ட நாட்களாக சகிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில்  பதுளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்