பொதுத் தேர்தலில் இதுவரை தபால்மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் அதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சேவைத் தளத்திற்கு அருகில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று இதுவரை வாக்களிக்காதோருக்கு தபால்மூலம் வாக்களிக்க முடியும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை நாளை முடிவடையும் என பிரதித் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, தமக்கான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 70 சதவீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதித் தபால் மா அதிபர் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.