15
திருகோணமலையில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ப டு கொ லை ! on Tuesday, November 05, 2024
திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் 63 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் வசித்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (05) காலை குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக உயிரிழந்த பெண்ணின் கணவரது சகோதரனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.