சரத்பொன்சேகாவை விட சஜித் குறைவா?

by wp_fhdn

முன்னதாக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சி இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை ஆதரித்த தீர்மானத்தை எடுத்தவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் முக்கியமானவர் என எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அதிலும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கின்ற முடிவை மட்டுமல்ல. ஆதரித்து பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தியவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது பங்காளிகள் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரித்த போது  சிங்களவன் ஒருவரை மானத் தமிழன் ஆதரிப்பான என்றார்கள். கஜேந்திரகுமார் சும்மா சிங்களவரை அல்ல, இராணுவத் தளபதியையே ஜனாதிபதியாக ஆதரித்தவர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பை யார் உடைத்தது? கூட்டமைப்பை ஆசனத்திற்காக முதலாவதாக உடைத்தவர் கஜேந்திரகுமார். 2010 பொதுத் தேர்தல் நியமன வழங்கலில் அவரது கட்சிக்கு அவர் கேட்ட நியமனங்கள் வழங்கப்படாததால், கொள்கை முரண்பாடு என்று பொய் சொல்லிக் கொண்டு கட்சிக்கு வெளியே சென்றவர் தான் கஜேந்திரகுமார். ஆசனம் கிடைக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டு பிள்ளையார் சுழி போட்டவர் அவர். அது இன்று வரை சங்காக, மாம்பழமாகத் தொடர்கிறதெனவும் பருத்தித்துறையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருத்து வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்