எம்மக்களை அரசியல் அநாதைகளாக ஆவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை, கொக்காவில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாங்கள் வண்ணங்களாலும் சின்னங்களாலும் வேறு பட்டிருந்தாலும் எண்ணங்களால் வேறுபடவில்லை.
பதுளை மாவட்டத்தின் அழகை பிரதிநிதித்துவப்படும் வகையில் கொக்காகல தோட்டம் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தைப் போன்றே இங்கு வாழும் மக்களும் மனதளவில் அழகானவர்களாகக் காணப்படுகின்றனர்.
இங்கு வாழும் மக்களில் பெரும்பாளானோர் தோட்டத் தொழிலாளர்களாகக் காணப்பட்டாலும், தற்போது அதிகளவான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர்.
எனினும் இந்த வளர்ச்சி போதுமான அளவில் இல்லை. இத் தோட்டத்தில் காணப்படும் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அத்துடன் இங்கு சிறப்பு மிக்க முருகன் ஆலயமொன்றும் உள்ளது. இந்த ஆலயத்துக்கான கலசார மண்டபமொன்று அமைக்கப்பட வேண்டும்
எதிர்வரும் காலத்தில் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் இங்கு ஒரு கலாசார மண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும்.
இப்பகுதியில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் சில விசமிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எமது மக்கள் அரசியல் அநாதைகளாக ஆகும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களிடம் ” சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கின்றேன்” இவ்வாறு வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.