அநுராதபுரத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து ; 14 வயது சிறுவன் பலி !

by sakana1

அநுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரவிலகல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விறகுகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ள நிலையில் கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், நேகம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உழவு இயந்திரத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்