16
on Tuesday, November 05, 2024
ஐஸ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் மலேசியாவிலிருந்து நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 05 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 100 மில்லியன் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
You may like these posts