11
இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி (Marapi) எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தின் போது, சுமார் 6,500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் வீடுகள் எரிந்து 9 பேர் பலியாகியுள்ளதாகவும், நெருப்புக்குழம்பு வெளியேறுவதால், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.