4
பூநகரி பகுதியில் 80 கிலோ கேரள கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்றைய தினம் திங்கட்கிழமை (04) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் பூநகரி – கௌதாரி முனை பகுதியிலிருந்து 80 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.