அரசியல் வரலாற்றில் எந்தவொரு கறுப்புப் புள்ளியும் தனக்கு இல்லை என்பதனாலேயே மக்கள் ஆணைகோரி பொதுத்தேர்தலில் முன்னிலையாகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஊழல் மோசடிகள்,இலஞ்சம் கோரல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற மோசடிகளில் ஈடுபட்ட வரலாறு எமக்கு இல்லை.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக குரல் கொடுத்தமையினாலேயே நான் நாடாளுமன்றுக்கு மூன்று தடவைகள் அதிக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டேன். அரசியல்வரலாற்றில் எந்தவொரு கருப்புபுள்ளியும் எமக்கு இல்லை என்பதனாலேயே இன்றும் தேர்தலில் முன்னிலையாகியுள்ளோம். அதனாலேயே இன்று தலைநிமிர்ந்து உங்கள் முன்நிற்கின்றோம்.
ரஞ்சன் ராமநாயக்க ஊழல்வாதி, கள்வன் என ஆளுந்தரப்பினாலும் எதிர்த்தரப்பினாலும் என்மீது குற்றம் சுமத்தமுடியாது. நான் ஊழல்வாதியும் அல்ல இலஞ்சம் பெறுபவனும் அல்ல.
போதைப்பொருள் மோசடியாளனும் அல்ல. வரலாற்றில் ஊழல்வாதிகள் இலஞ்சம் பெறுவோர் போதைப்பொருள் மோசடியாளர்களுக்கு எதிராக குரல்கொடுத்த வரலாறே எனக்கு உண்டு.
அவ்வாறானவர்களுக்கு எதிராக நாடாளுமன்றில் உண்மையை பேசியவன் நான் .எனவே மக்கள் தைரியமாக தன்னம்பிக்கையுடன் எமக்கு வாக்களிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.