2
லெபனானில் வேலைகளுக்காக இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
லெபனானில் நிலவும் பிரச்சினையே இதற்குக் காரணமாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
லெபனானில் நிலவும் பிரச்சினை நிறைவுபெறும் வரை இலங்கை தொழிலாளர்கள் லெபனானுக்கு செல்வதற்கான பதிவு மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
தற்போது ஏழாயிரத்து 400 இலங்கையர்கள் லெபனானில் பணியாற்றி வருவதாக அதன் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.