வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கே கர்வாலில் இருந்து ராம்நகர் செல்லும் வழியில் புறப்பட்ட பேருந்தில் குறைந்தது 42 பயணிகள் இருந்ததாகக் கருதப்படுகிறது.
மலைப்பகுதியான அல்மோரா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் முதற்கட்ட தகவல்கள் பேருந்து பழமையானதாகவும், பழுதடைந்ததாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 200,000 ரூபாய் ஆதரவாக வழங்கப்படும் என மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் உள்ள மலைச் சாலைகளில் சாலை விபத்துகள் பொதுவானவை. பெரும்பாலும் இயற்கையான ஆபத்தான நிலைமைகள், மோசமான பராமரிப்பு அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.