14ம் திகதி வாக்களிப்பு:மாற்றமில்லை!

by adminDev2

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் முடிவு அரசியல் சாசனத்துக்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உத்தேச திகதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி கடந்த 21ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும், “நாம் சிறிலங்கா தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம்.பிரியந்த ஹேரத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கும் தேர்தலை நடத்துவதற்கும் நவம்பர் 15 முதல் நவம்பர் 29 வரை சரியான நேரம் என சுட்டிக்காட்டியே மனுதாரர், வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே தபால் மூல வாக்களிப்பு முடிவடைந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி நாடாளுமன்ற தேர்தல் 14ம் திகதி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்