2
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 288.55 ரூபாவாகவும், 297.60 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (01) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறயே 288.59 ரூபாவாகவும், 297.64 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது.
அதேநேரம், ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.