சுமந்திரன் மேடையில் ஏறமாட்டேன்: சாள்ஸ்!

by adminDev2

எம்.ஏ சுமந்திரனின் பொய் புரட்டுக்களிற்கு எதிராகவும் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் இலங்கை காவல் நிலையத்தில்; சாள்ஸ் நிர்மலநாதன் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

மதுபானசாலைக்கு  சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார் .

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். 

அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.

அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை. அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது என்பதற்காக தான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும்  சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்