28
இலங்கையில் (Sri Lanka) தங்கியிருந்த போது விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை புவேலிகடயில் வைத்து கண்டி (Kandy) சுற்றுலா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய பிரஜை ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.